விளாம்பழம்: ஒரு அருமையான மருந்து தெரியுமா?

பாட்டி வைத்தியம்:

தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொட ர்ந்து சாப்பிட்டு வந்தா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகற தோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்!

இந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன் விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ… அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச் சுடுது! விளைவு & சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரை ச்சுடுது.

பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவை யான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப் பான்மை தானாவே வந்துடும்.

இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை பச்சடி பண்ணி சாப்பிடறதுதான்!

விளாம்பழ சதைப் பகுதியில, வெல்லம் போட்டு பிசைஞ்சு, கொஞ் சமா தண்ணி விட்டு அடுப்புல வச்சு, ஜாம் மாதிரி ஆனதும் இறக் கிடுங்க. விருப்பப்பட்டா, ஒரு காய் ஞ்ச மிளகாயை தாளிச்சுக் கொட்டலாம். அவ்வளவுதான், விளாம்பழ பச்சடி ரெடி! இனிப்பும் புளிப்புமா வாய்க்கு அவ் ளோ ருசியா இருக் கும்.

பித்த சம்பந்தமான எல்லா வியாதி யையும் குணப்படுத்தற மருத்துவத் தன் மை விளாம் பழத்துல இருக்கு! தினம் ஒரு பழம்னு 21 நாள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டா, பித்தக் கோளாறுகள் அத்த னையும் குணமாகறதோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்.

வளர்ற குழந்தைகளுக்கும் விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ரெடி பண்ணிக் கொ டுத்து, சாப் பிட வச்சா, உறுதியான எலும்புகள் அமை யும்.. ஞாபக சக்தி அபாரமா இரு க்கும்.. நோய் களும் சட்டுனு தாக்காது! வயசா னவங்களுக்கு விளா ம்பழ பச் சடியை சாப்பிடக் குடுங்க. அது ஒரு டானிக் மாதிரி செயல்ப டுறதால, அவ ங்க புதுத் தெம் போட உலா வருவாங்க. பற்கள் பலப்படும்.

அடை, தோசைக்குத் தொட்டுக் கிட்டு சாப்பிட, விளாம்பழ பச்சடி ஜோரான ஜோடி. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.