பக்தியின் வகைகள்

பல்வகையான பக்தியின் மூ லம் முக்தியடைந்த அடியா ர்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங் களை அறியலாம். சாஸ்திர ங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தி யை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

ச்ரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர் களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.

கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பொருட்டு கீர்த்தனங் களை உருவாக்கி அதன் மூலம் இறை புகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.

ஸ்மரணம்: இறைவன் நம் மன தை படைத்த பயன் நிறை வேறும் வகையில் எப்போதும் அவனைப் பற்றி நினைத்துருகுவது ஸ்மர ணம்

பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸே வனமாகும்.

வந்தனம்: இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எ னவே உடலோடு என் உள்ளத்தையும் உனக் களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங் கமாய் இறைவனை வண ங்கி எழுதல்.

தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.

ஸக்யம்: அடியவன் இறை வனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.

ஆத்ம நிவேதனம்: இந்த ஆத் மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்ன மாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.

நன்றி- திருமதி உஷா ராம நாதன் அவர்கள்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.