அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோ ற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப் படுத்தும்.

அதற்காக தோற்றத் தை சீர்கேடாக வைத் துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்… ஒவ்வொரு வரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும் புவர். அதிலும் இளம் பருவத்தினரு க்கு தன்னை அழகு படுத்திக் கொள் வதில் நாட்டம் அதிகம் இரு க்கும்.

அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீ ம்களைத் தடவி தன்னை அழகுபடு த்திக் கொள்வர். இது சிலருக்கு அல ர்ஜியை ஏற்படுத்திவிடும். முகத்தி ல் சொறி, கருப்புத் திட்டு, முகச் சுருக்கம், கண்களில் கருவளையம், முகப்பரு, தேமல் என பல வகை யான பாதிப்புகள் ஏற்படும். 

சிலருக்கு பலஹீனத்தாலும், ஈரல், இருதயம், குடல் பாதிப்புகளாலும் இம்மாதிரியான அலர்ஜி உருவாகலாம். முகத்தின் சருமம் மிகவும் மென்மையா னது.  அதனாலே யே எந் த ஒரு நோயும் முதலில் முகத்தில் பாதிப்பை ஏற் படுத்துகின்றன. மனிதனின் அகத்தை மட்டுமல்ல, நோயையும் கூட முகத்தில் பார்த்து விடலாம்.

இப்படி வெளிப்புறத்தாலு ம், உட்புறத்தாலும் ஏற்ப டும் பாதிப் பால் உண்டான தோல் அலர்ஜி நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இரு வகை யான மருந்துகளைக் கொடுப்பார் கள்.

ஒன்று மேற்பூச்சு மருந்துகள், மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள். 

அப்படி மருந்துகளைச் சாப்பிடும் போ தோ அல்லது பூசும் போதோ பாதிக்க ப்பட்ட உறுப்புகள் குணமாகும். தோ லில் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

மங்கு:

சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து கா ணப்படும். இதனை மங்கு என்பார்க ள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்துள்ளதால் அவை உடலில் உள்ள நாள மில்லாச் சுரப்பிகளை பாதிக்கி ன்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளால்கூட ஹார்மோன்கள் பாதிப் படையும். குறிப்பாக மெ னோபாஸ் காலங்களில் மூக்கில் மங்கு உண்டா கும். இந்த மங்கு தோன் றினால் முக அழகு மாறி விடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளா கி உடல் சோர்ந்து விடு வார்கள். இப்பிரச்சி னை தீர இதோ ஒரு எளிமை யான மருத்துவ முறை…

கோக்டம் – 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊற வை த்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண் டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர் ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறை யும். (குறிப்பு – முகத்தில் தடவும் போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

சருமம் பளபளக்க:

பச்சைப் பயறு –  250 கிராம்
மஞ்சள் –  100 கிராம்
வசம்பு –  10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பள பளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீ ராவது அருந்த வேண்டும். 

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயி ல் பொரிக்கப்பட்ட உணவுகள், கொ ழுப்புச்சத்து அதிகம் உள்ள பொரு ட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதி கம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடி க்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத் தும்.

* கோபம், மன அழுத்தம் இவற் றைக் குறைத்துக் கொள்ள வேண் டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப் புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரி க்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.