எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் – வீடியோ

1.அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வே லையாட்களும் காவலாளிகளும் 3வருடம் வரையும், ஆண் எறு ம்பு சில மாதமும் உயிர் வாழ்கி ன்றன. (பூச்சி இனங்களில் மிக வும் அதிக காலம் உயிர் வாழக் கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது)

2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட் டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக் கும். அதே வேளையில் ராணி இல்லாது எறும்பு இருப்பது இல்லை.

4. எறும்பு இனமானது மிகசிறியது முதல் 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) வரை உள்ளன. 10000 மேலான வகைகளில் உ ள்ள எறும்புகளின் உணவானது தானியம், பங்கஸ், தேன் என பல வகைகளில் அடங்கும்.

5. மிகவும் சிறந்த மோப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி), கண் பார்வை உடைய எறும்புகளு க்கு சுவாசப்பைகள் இல்லை.

6. எறும்புகள் தமது உடல் எ டையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.

7. எறும்பு பற்றிய கற்றல் (ஆராய்ச்சி) MYRMECOLOGY என அழைக்கபடுகிறது.

8. எறும்பின் மூளையில் 250000 கலங்கள் இருப்பதாக கண்ட றியப்பட்டுள்ளது.

9. உலகில் மூன்றில் ஒரு பங்கு எறும்பு கூட் டம் அமேசான் காட்டில் இருப்பதாக ஆராய்சிக ள் தெரிவிக்கின்றன.

10. மிகவும் திடகாத்திர மான சமூக அமைப்பி னையும் பிராந்திய எல் லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்ப மானதும் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் பெருமளவில் கூட்ட ங்களை கொண்டுள்ளது.

11. குடியிருப்பு இடங் களான நிலம், மரம், நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடி ய வாழ்வியலை கொ ண்டுள்ள எறும்பு இன மானது மிகசிறந்த உயிர் தப்பி வாழும் ( SURVIVAL ) உயிரின ங்களில் முக்கியமானதாகவும் உள்ளது.

12. எறும்புகளின் மிகவும் ஒழுங்கான கட்டமைப்புகள் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றிய மைக்கும் இயல்பு, தம்மைதாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கு காரணங்க ளாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.