வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள்

ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லா மல் உடலின் அத்தனை பகுதிக்குமான உடற் பயிற்சியும் அகும். மேலு ம் இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. எனவே மழைக்காலத்தில் உடல் எடை கூடிவிடுமே என்று கவலைப் படாமல் ஸ்கிப்பிங் விளையாடுங்கள்.  

வெளியே சென்று ஜாங்கிங் போக முடியவில்லையே என்று நினைப் பவர்களுக்கு மாடிப்படி இருக்கிறது. தின சரி நான்கு முறை ஏறி இற ங்குங்கள் கலோரிகள் எரிக் கப்படும். ஜாக்கிங் போகமுடியவில்லையே என்ற குறை தீரும்.  

மனதிற்குப் பிடித்த பாடலை போட்டுக்கொண்டு வீட்டிற்குள்ளேயே நடனமாடுங்கள். ஏனெனில் நடனம் மிக ச்சிறந்த உடற்பயிற்சியாக இருப்பதோடு உடலின் வடிவமைப்பை கட்டுக்குள் வைக்கும். மன அழுத்தம் இருந்தாலும் குணமடையும்.  

புஷ் அப்ஸ் – சிட் அப்ஸ் இவை இரண்டும் வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள். பத்து முறை உட்கார்ந்து எழுந்திரியுங்கள். உங்களின் உடலில் உற் சாகம் பிறக்கும். வயிறு, தொடைப் பகுதி குறைவதற்கான அற்புதமான உடற்பயிற்சி.  

கைகளுக்கு வலிவு தரும் பயிற்சிகளை செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பெட் பாட்டில்களி ல் தண்ணீரை நிரப்பி அதை கைகளில் வைத்து ஏற் றி இறக்கலாம். டம்ப்பெல்ஸ் செய்வதற்கு சமமானது இந்த உடற்பயிற்சி.  

இனி வெளியே சென்று ஜாக்கிங் போக முடிய லையே என்று வருந்தவேண்டாம். மேலே கூறிய எளிய உடற்பயிற்சிகளைசெய்து உட லை யும், மனதையும் ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளுங்களேன்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

2 Responses

  1. Very nice

    Like

  2. I need more

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.