விவாகரத்துக்கு காரணமான‌ பேஸ்புக்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம். இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ்புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ்புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20% பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி – தினமலர் / படத்தொகுப்பு விதை2விருட்சம்

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும்.

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  (Standard)  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9)    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2.கைட் லைன்களின் (Guidelines)  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் (Ctrl)  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  (Shift)  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  (Ctrl)   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:   ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்(Shift)  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டு மென்றால் Shift  மற்றும்  Ctrl   கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

எத்தனை முறை இந்த தளம் சென்றாய் ?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்து விட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணையதளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.

இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும்.  Tools>Page Info  என்பதில் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ்  see “Have I visited this website before today?”  என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.

(படித்ததை படைத்தேன்)

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

பேஸ்புக்: கூகுளை அழிக்க. . .

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

கூகுளை அழிக்க வேண்டும் என்ற தீராத இலட்சியம் கொண்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை. கூகுளை அழிப்பதற்கு பேஸ்புக் என்ற சமூக வலைதளம் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. இந்த கட்டுரையை படியுங்கள்.

இன்றை காலக்கட்டத்தில் எப்படி கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டதோ அதே போல் இ-மெயில் எதிர்காலத்தில்  குறைந்து விடும் எனக் கூறியுள்ளார்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க். அனைத்து இ-மெயில்களையும் உள்ளடக்கிய தகவல் அனுப்பும் வசதி ஒன்றினை பேஸ்புக் புதிதாக உருவாக்கியுள்ளது.

கூகுளின் ஜிமெயில் வசதியை அழிப்பதற்காகவே பேஸ்புக் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பரவலாக அனைவராலும் பேசப்படுவதால் பேஸ்புக்கின் இந்த புதிய வசதிக்கு கூகிள் தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகிறது.   தற்போது பேஸ்புக்கை 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.   இனி இ-மெயில், குறுந்தகவல், பேஸ்புக் தகவல் எதுவாக வேண்டுமானாலும் பேஸ்புக்கை  பயன்படுத்தி அனுப்பிக் கொள்ள  முடியும். மிகவும் முக்கியமான விடயம் இதில் ஸ்பாம் மெயில்களும் வடிகட்டிவிடும். அனைத்தும் ஒரே இடத்தில்

அவரவர் வசதிக்கேற்றவாறு கிடைப்பதால் இது  இ-மெயில் அழிப்பான் என்றே கூறப்படுகிறது.  பல இ-மெயில்களையும் பயன்படுத்துவோர் இனி பேஸ் புக்கில் வந்தது குவிந்து விடுவார்கள் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.   இந்த வசதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டால் தரமான இ-மெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் குறைந்து விடுவர்.  காலங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இ-மெயில் வசதி இல்லாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் ஜிமெயில் தங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும், ஜிமெயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படவில்லை என புதிய விரைவுத் தகவல் அனுப்பும் வசதியை தொடக்கி வைத்துப் பேசிய 26 வயதாகும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் இவ்வாறு கூறினார்.

கணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில குறிப்புகள்

முக்கியமான சில கணிணி டிப்ஸ்

Print E-mail

ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like http://www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like http://www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter Ctrlலை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக் கொண்டேவரும்.தெரியுமா?

Ctrl-லை அழுத்தியவாறே – அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக் கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.

WINDOWS KEYஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.

WINDOWS KEYஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.

F3 அழுத்தினால் Find திறக்கும்.

F5 அழுத்தினால் refresh ஆகும்.

Alt ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift –ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.

shift ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run –ல்

(மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்

.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்

. (ஒரு புள்ளி டைப்பினால்) User Profile திறக்கப்படும்

WINDOWS KEYஐ தட்டி அப்புறம் Lவை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.

WINDOWS KEYஐ தட்டி அப்புறம் Uவை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

(படித்ததை படைத்தேன்)


மடிக்கணினி (Laptop) வாங்கப்போகிறீர்களா?

மடியில் கமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது பழமொழி, ஆனால் தற்பொழுதோ மடியில் கணம் இருந்தால் வழியில் பயமில்லை என்பது புதுமொழி. ஆம் அப்படி பலரது மடியில் தவழ்ந்து கன நேரம் கூட பிரியாமல் நம்மில் ஓர் அங்கம் ஆகிவிட்ட மடிக்கணிணியை பற்றி தான் பார்க்கப் போகிறோம் .

கணிணி இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை அடுத்து கணிணி இல்லாத வீடு என்பதை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியின் இடத்தை எட்டி விடும் தூரத்தில் தான் கணிணியின் வளர்ச்சி இருக்கிறது . இந்த குறுகிய காலத்தில் கணிணியின் வளர்சிக்கு பெரிதும் உதவி இருப்பது மடிக்கணிணி வகையாகும். மடிக்கணிணி வந்த பிறகு தான் கணிணியின் விலை குறைந்து நடுத்தர மக்கள் வாங்கும் நிலை வந்தது.

மடிக்கணிணி பல்வேறு வகைகளில் கிடைத்தாலும் நம் பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்க வேண்டும். பொதுவாக என்ன விசயங்களில் நாம் கவனம் கொள்ளவேண்டும் எனில் மடிக்கணிணியுடன் வரும் வெப்கேமரா, விரல் ரேகை மூலம் லாக் செய்வது , பாட்டரி, எடை, திரை அளவு ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். இதில் எது தேவை என்பதை கரத்தில் கொண்டு வாங்க வேண்டும். பொதுவாக மடிக்கணிணி எடை குறைந்த அளவில் வாங்க வேண்டும். திரை அளவு, திட்டமிட்டு தொடரும் எடை அளவும் கூடும். 6 செல்ஸ் மற்றும் 9 செல்ஸ் பேட்டரி இருந்தாலும் 9 செல்ஸ் பேட்டரி கொண்டு அதிக நேரம் வேலை செய்யலாம் ஆனால் அதை நிறுவும்போது மடிக் கணிணியின் எடை கூடவும் செய்யும் .

அதிகப்படியான வசதிகள் அதிக விலை உள்ளவையாகவும் அடிக்கடி உபயோகப்படுத்த முடியாமலும் இருக்கும் .

(படித்ததை படைத்தேன்)


கம்ப்யூட்டருக்குப் புதியவரா ? கம்ப்யூட்டரின் கிளிப் போர்டுகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் உள்ளது. அது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளது . இது ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் பாயின்ட், பெயிண்ட் என எந்த புரோகிராமில் இருந்து  காப்பி கட்டளை கொடுத்தாலும், உடனே அது இந்த கிளிப் போர்டில் வந்து அமர்ந்து கொள்கிறது.  மேலே குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமில் இருந்து, தனித்தனியே, ஒவ்வொன்றி லிருந்தும் ஒன்றை காப்பி செய்து இந்த கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லலாம். பின்னர் அங்கிருந்து, வேறு எந்த புரோகிராமிலும் இதனை ஒட்டலாம். உங்களுக்குத் தெரியுமா? எந்த விண்டோஸ் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தாலும், பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தினால், அப்போதைய திரைத் தோற்றம் காப்பி செய்யப்படும். இதுவும் கிளிப் போர்டில் ஒட்டிக் கொள்ளும். இதனையும் வேறு ஒரு விண்டோஸ் புரோகிராமில் இணைக்கலாம். இவ்வாறாக, மொத்தம் 24 ஐட்டங்களை, கிளிப் போர்டில் சேர்த்து வைக்கலாம். 25 ஆவது ஐட்டம் வருகையில், இறுதியாக உள்ள ஐட்டம் தானாக வெளியேறும். இவை நாம் ஆபீஸ் தொகுப்பி னை மூடும் வரை அப்படியே இருக்கும்.
ஆபீஸ் தொகுப்பில் உள்ள எந்த புரோகிராமிலும், கிளிப் போர்டினைத் திறந்து பார்க்கலாம். வேர்ட், எக்ஸெல் என ஏதேனும் ஒரு புரோகிராமினைத் திறந்து, கண்ட்ரோல் +சி+சி என அழுத்துங்கள். வலது புறமாகக் கிளிப் போர்டு திறக்கப்பட்டு, அதில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள ஐட்டங்கள் வரிசையாகக் காட்டப்படும். இந்த கிளிப் போர்டு திறந்தவுடன் கீழாக Options  என்று ஒரு கட்டம் தெரியும். இதில் கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் அதில் பல ஆப்ஷன்களுடன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் 1) ஆபீஸ் கிளிப் போர்டு தானாகக் காட்டப்பட, 2) கண்ட்ரோல் +சி இருமுறை இயக்கப்பட்டால் ஆபீஸ் கிளிப் போர்டு திறக்கப்பட, 3) ஆபீஸ் கிளிப் போர்டு காட்டப்படாமலேயே காப்பி செய்யப்படும் ஐட்டங்கள் இணைக்கப்பட, 4) டாஸ்க்பாரில் ஆபீஸ் கிளிப் போர்டு ஐகான் காட்டப்பட மற்றும் 5) காப்பி செய்யப்படுகையில் அதன் நிலை என்ன என்று டாஸ்க் பாரில் காட்ட என ஐந்து ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நாம் விரும்பும் வகையில் தேவையானதை டிக் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கிளிப் போர்டு திறக்கப்பட்டால், அது ஸ்டேட்டஸ் பாரில், நேரம் காட்டப்படும் இடம் அருகே காட்டப்படும். அதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், கிளிப்போர்டில் 24 வைக்கும் இடத்தில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ளது என்று காட்டும்.  காப்பி செய்யப்படும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஆபீஸ் கிளிப் போர்டில் ஒரு ஐகான் தெரியும். அந்த அந்த புரோகிராமின் ஐகான் காட்டப்பட்டு காப்பி செய்யப்பட்டிருப்பது எந்த புரோகிராமிலிருந்து எடுக்கப்பட்டது எனக் காட்டப்படும். மேலும் காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி காட்டப் படும். அது கிராபிக் ஆக இருந்தால் அதன் சிறிய படம் தெரியும். இதன் மூலம் நாம் கிளிப் போர்டு பட்டியலைப் பார்க்கையில் அது என்ன என்று அறிந்து கொண்டு தேவையான தை பேஸ்ட் செய்திடலாம். கிளிப் போர்டில் இருப்பதை அப்படியே மொத்தமாக நாம் விரும்பும் பைலில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது தேவைப்பட்ட ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம். ஜஸ்ட் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாக எதனைக் காப்பி செய்தோமோ அது மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். அல்லது கிளிப் போர்டில் உள்ள பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் பேஸ்ட் ஆகும். இதற்கு மாறாக சிஸ்டம் கிளிப் போர்டு இயங்குகிறது.  இதில் நாம் அப்போது காப்பி செய்திடும் ஐட்டம் தங்கும். இங்கு ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே தங்கும். இரண்டு கிளிப் போர்டும் எப்படி இணைந்து செயல்படு கின்றன? ஆபீஸ் கிளிப் போர்டில் பல ஐட்டங்களை காப்பி செய்திடுகையில் கடைசி ஐட்டம் மட்டுமே சிஸ்டம் கிளிப் போர்டில் தங்கும். கண்ட்ரோல்+ வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாகக் காப்பி செய்த ஐட்டம் மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். இது சிஸ்டம் கிளிப் போர்டிலிருந்து நமக்குக் கிடைக்கும்.

(படித்ததை படைத்தேன்)

பி.டி.எப். கோப்புகளின் தடைகளை நீக்க

அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நம் பல கவலைகளைப் போக்கும் பைல் வடிவம் பி.டி.எப். ஆகும்.  இந்த வகைக் கோப்புகளைப் படிக்கக் கிடைக்கும் இலவச புரோகிராம்களின் துணை கொண்டு, பலவகை பார்மட் பைல்களை (வேர்ட், எக்ஸெல், பவர்பாயின்ட், பேஜ்மேக்கர்) அவை பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால் படித்துவிடலாம். ஆனால் சில வேளைகளில் இந்த வகை பைல்களிலும் சோதனையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. நமக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பி.டி.எப். பைலாகக் கிடைத்துவிட்டதே என்ற ஆசையுடன் அதனைப் படிப்போம். சில பக்கங்கள் முக்கியமாக உள்ளது என்று எண்ணி, அதனை அச்செடுக்கக் கட்டளை கொடுத்தால், அச்சுக்குச் செல்லாது. அச்செடுக்க அந்த பி.டி.எப். கோப்பிற்கு தடை அமைக்கப்பட்டிருக்கும்.

சில பி.டி.எப். கோப்புகளை இணையத்திலேயே பார்க்க படிக்க வகை செய்யப்பட்டிருக்கும். இதில் சில பக்கங்களை அல்லது பத்திகளை காப்பி செய்திட முயற்சி செய்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகாது. ஏனென்றால், அதனை பி.டி.எப். ஆக வடிவமைத்தவர் காப்பி  செய்வதனைத் தடை செய்திடும் தளையை அமைத்திருப்பார்.  இதில் நம்மை மிக மிக கோபப்பட வைத்திடும் நிகழ்வாக, நாம் சில வேளைகளில் கட்டணம் செலுத்திப் பெற்ற பி.டி.எப்.கோப்புகளிலும் இந்த தளைகள் இருக்கும். ஒரு சில பி.டி.எப். கோப்புகள் பாஸ்வேர்ட் தடையுடன் வரும். இதனை நாம் எதுவுமே செய்திட முடியாது. லட்டு போல பி.டி.எப். பைல் கிடைத்தும், உடைத்துச் சாப்பிட இயலவில்லையே என்று கவலைப்படுவோம்; ஆதங்கப்படுவோம் மற்றும் ஆத்திரப்படுவோம். இந்த கவலைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நமக்கு உதவிடும் இணையதளம் ஒன்று உள்ளது. இந்த தளம் பி.டி.எப். பைல் ஒன்றில் உள்ள நகலெடுக்கும், அச்செடுக்கும் தளைகளை நீக்கித் தருகிறது. அதே போல பாஸ்வேர்ட் தடை இருந்தால், அதனையும் உடைத்துத் தருகிறது.  இந்த தளத்தின் பெயர் http://www.freemypdf.com இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் நடுப்பக்கத்தில் மிக முக்கியமான பிரவுஸ் (Browse)  பட்டனைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, தளைகள் மற்றும் தடைகள் கொண்ட பி.டி.எப். கோப்பினைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடவும். கோப்பின் அதிக பட்ச அளவு 7 எம்.பிக்குள் இருக்க வேண்டும். கோப்பு வெற்றிகரமாக மேலே அந்த தளத்திற்கு அனுப்பப் பட்டவுடன் Do It   என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஒருசில நொடிகளில், தளைகளும் தடைகளும் நீக்கப்பட்ட பி.டி.எப்.கோப்பு உள்ள புதிய இணையப் பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் அந்த பைலுக்கான லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்து அந்த கோப்பினை இறக்கிப் பயன்படுத்தவும். இந்த சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால், இதற்கு ஏதேனும் நன்கொடையாகக் கட்டணம் செலுத்தலாம்.  இவ்வாறு தளைகளை நீக்குதல், பூட்டப்பட்ட வீட்டின் பூட்டுகளை உடைத்துத் திருட்டுத்தனமாகச் செல்வதற்குச் சமமில்லையா என உங்கள் மனது கேட்கலாம். எனவே தான் இந்த சேவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு அல்ல என்று இந்த தளத்தில் பெரிய எழுத்துக்களில் காட்டப்படுகிறது. உங்கள் அறிவுத் தேடல்களுக்கு மட்டுமே இந்த உதவியை நாடவேண்டும். வர்த்தக ரீதியாக லாபம் அடைய இதனைப் பயன்படுத்தக் கூடாது.

(படித்ததை படைத்தேன்)

இணையத்தில் நூல்கள் இலவசம்

கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் “அண்மையில்” என்ற முகவரியில் தளம் ஒன்றைப்  பார்க்க நேர்ந்தது.  அதன் முகவரி: http://sciencebooksonline.info.  . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம்  உள்ள பிரிவில்  Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine மற்றும்  Physics என்ற பிரிவுகள் காணப்படுகின்றன.

எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். சில நூல்கள், ஆன் லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன.  பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

(படித்ததை படைத்தேன்)