உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? திரும்பப் பெற ஒரு வழி

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இத னைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறி த்து வைத்திருக்க வேண்டும். எனவே உங் கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல் பாட்டினை மேற்கொண் டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந் து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப் போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை Continue reading

பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோ டேட்டா  உருவாக்க வே ண்டும் என்றால் பல பேரின் பயோடேட்டாக் களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிற தோ அதன்படி தான் பல பேர் பயோடேட்டா உரு வாக்குகின்றனர் ஆனால் Continue reading

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் . . .

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட் டால் அவர்கள் சிறையில் 5 ஆண் டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீ சார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண் டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய கா லம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணை ய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் Continue reading

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிய . . .

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட் டது. மக்கள் தொகை வளர்ச்சி வி கிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக் கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., வின் மக்கள் தொகை நிதியமை ப்பு, ஒரு புதிய இணைய தள த்தை உருவாக்கியுள்ளது. அந்த இணை யதளத்தில் நீங்கள் நுழைந்து, உங் கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற் போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்ற எண் ணி க்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா., வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் Continue reading

போலி மின்ன‍ஞ்சல் முகவரிகளை அடையாளம் காண உதவும் தளம்

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப் பினார்கள் என்றே தெரியா மல் வந்திருப்பதை க‌வனித் திருப்பீர் கள்.

அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வ தே இல்லை. ஆனால் அப்படி யான மின்னஞ்சல்கள் ஆப த்து நிறைந்தவை. அவற் றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் Continue reading

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை – தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு Continue reading

புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர் களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன் ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர் களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனு மதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இது வரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு Continue reading

பேஸ்புக் முகவரியை மாற்ற வேண்டுமா?

நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பின ர்களாக உள்ளோம்.

நாம் பேஸ்புக் கணக் கை தொடங்கும் போ து ஏதோ ஆர்வக் கோ ளாறில் ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. முகவரியை மாற்ற

1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Continue reading

வெப்சைட்டில் நம் குறிப்புகள்

இணையத்தில் தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் உள்ள தகவல்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அல்லது யாருக்கு அனுப்ப வேண்டும் என்று திட்ட மிடுகிறீர்கள்.   இப்படிப் பல குறிப்புகள் அது குறித்து அமைக்க எண்ணுகிறீர்கள். இவற்றைக் குறித்து வைக்க என்ன செய்யலாம்? மேஜை மீதுள்ள ஒரு தாளில், இணைய தள முகவரி மற்றும் தகவல்கள், அனுப்ப வேண்டிய நபர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது பெயர் குறித்து வைக்கலாம். அல்லது இதற்கென டெக்ஸ்ட் எடிட்டரில் ஒரு பக்கம் திறந்து மேலே குறிப்பிட்டவற்றை தனியே அமைத்து வைக்கலாம். ஏன், இணையப் பக்கத்திலேயே, ஆங்காங்கே குறித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பி.டி.எப். பைல்களில்  பயன்படுத்தும் “”ஸ்டிக்கி நோட்ஸ்” போல இணைய தளப் பக்கங்களிலும் குறித்து வைத்தால், நமக்கு வசதி தான். ஆனால் முடிய வில்லையே என்று எண்ணுகிறீர்களா! கவலையை விடுங்கள். நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த வசதியை “Note Anywhere”  என்ற எக்ஸ்டன்ஷன் தொகுப்பு தருகிறது.  இந்த தொகுப்பின் மூலம், குரோம் பிரவுசரில் ஒரு இணைய தளத்தினைக் காண்கையில், அதில் குறிப்புகளை எழுதி வைக்க எண்ணினால், உடனே அமைத்து வைக்கலாம். நீங்கள் மீண்டும் குரோம் பிரவுசர் மூலம், அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அந்த குறிப்புகளும் சேர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்.

இதனைப் பதிந்து கொள்ள, குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கவும். இதிலிருந்து https://chrome.google.com/extensions/detail/ bohahkiiknkelflnjjlipnaeapefmjbh   என்ற முகவரி யில் உள்ள தளம் செல்லவும்.  அடுத்து கிடைக்கும் “Confirm Installation”  என்ற டயலாக் பாக்ஸில்  “Install”  பட்டனில் கிளிக் செய்திடவும்.  இந்த எக்ஸ்டென்ஷன் பதிவு செய்யப்படும்.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும், இணைய தளத்தில் குறிப்பினை அமைக்க, டூல்பாரில் கிடைக்கும் நோட் ஐகானில் கிளிக் செய்து நோட்ஸ் டைப் செய்திடவும். இப்போது அந்த ஐகான், நீங்கள் டைப் செய்திடும் நோட்ஸ்களின் எண்ணிக்கையைக் காட்டும். டைப் செய்த குறிப்பினை நீக்க வேண்டும் என்றால், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, கிடைக்கும் கட்டத்தில் உள்ள ‘x’   அடையாளம் மீது கிளிக் செய்திடவும்.

அமைத்த நோட்ஸ் ஒன்றை, வேறு ஒரு இடத்தில் அமைக்க, அதனை அப்படியே இழுத்துச் சென்று விட்டுவிடலாம்.  இந்த நோட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால், ஆப்ஷன்ஸ் மூலம் அமைக்கப்பட்ட நோட்ஸ் சுருக்கத் தினைப் பார்க்கலாம். மேலும், நோட்ஸ் அமைக்கப்பட வேண்டிய எழுத்துவகை, எழுத்தின் வண்ணம், பின்புற வண்ணம் ஆகிவற்றையும் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்தவற்றை செட்டிங்ஸ் பிரிவில்   Save கிளிக் செய்து,  விரும்பும் வரை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம்.

(கண்டதையெல்லாம் படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்)
ப‌டத்தொகுப்பு விதை2விருட்சம்

விவாகரத்துக்கு காரணமான‌ பேஸ்புக்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம். இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ்புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ்புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20% பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி – தினமலர் / படத்தொகுப்பு விதை2விருட்சம்

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும்.

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  (Standard)  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9)    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2.கைட் லைன்களின் (Guidelines)  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் (Ctrl)  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  (Shift)  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  (Ctrl)   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:   ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்(Shift)  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டு மென்றால் Shift  மற்றும்  Ctrl   கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

எத்தனை முறை இந்த தளம் சென்றாய் ?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்து விட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணையதளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.

இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும்.  Tools>Page Info  என்பதில் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ்  see “Have I visited this website before today?”  என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.

(படித்ததை படைத்தேன்)