இணைய தள ஷார்ட்கட் கீ

இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன் படுத்து வதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் Continue reading

தயாரிப்பாளர்கள், செயற்கைகோள் உரிமம் மற்றும் இணைய தளங்களில், படங்களை குறைந்த விலையில் விற்க . . .

திருட்டுத் தனமாக இணைய தளத்தில் படம் டவுன்லோட் செய்வதற்கு, தடை விதிக்க சட்டத்தின் உதவியை நாட முடிவு செய்துள்ளதாகவும் கேரளாவில் உள்ள தயாரிப்பாளர்கள், படங்களை இணைந்து தயாரிக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். சர்வதேச கேரளா திரைபட விழாவின் போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் கினிஸ்டி, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச திரைபட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைதலைவர் பி.வி. குகனாதன் கூறுகையில், தயாரிப்பாளர்கள், செயற்கைகோள் உரிமம் மற்றும்  இணையதளங்களில், படங்களை குறைந்த விலையில் விற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கு 3 ஆவது இடம் : இணையதள பயன்பாட்டில்,

உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துபவர்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா என்று கூகுள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமையகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள மக்கள் தொகையில் 300  மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால், சீனா முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 207 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால், அமெரிக்கா  இரண்டாம் இடத்தை பிடித்திருப் பதாகவும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  மேலும் நமது நாட்டை பொறுத்தமட்டில் சுமார் 40 மில்லியன் மக்கள் கைபேசி (மொபைல் போன்)மூலமாக இணையதளத்தை பயன்படுத்துவதாகவும் வருகிற‌ 2012-ம் ஆண்டிற்குள் கைபேசி இணையம் (மொபைல் இண்டெர்நெட்)ஐ பயன்படுத்துபவர்களை, லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. சென்ற 2007-ஆம் ஆண்டில் 2 மில்லியன் மக்கள் இண்டெர்நெட்டை பயன்படுத்தினர் என்றும் இது இப்போது 20 மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இணையதளத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையினர் தனக்கு பிடித்தமான பாடல்களை தேர்ந் தெடுப்பதிலேயே அதிக‌ கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும்

wikileaks founder

வருத்தம் தெரிவிக்கிறேன்’ என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது’ என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கி லீக் நிறுவனர் அசாங்கேக்கு எதிராக, `உளவு பார்த்தது’ தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(மாலை மலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி)

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசேஞ்சுக்கு, ரஷ்யா ஆதரவு

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்களை பகிரங்கமாக வெளயிட்டது. இது அமெரிக்காவின் நிழல் உருவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அமெரிக்காவின் இந்த குட்டு வெளிப்பட்டதால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறது ரஷ்யா. அதன் வெளிப்பாடே அசேஞ்சுக்கு ஆதரவுதான். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக உலக நாடுகளுகளின் முன்வைக்க வேண்டும் சிபாரிசு செய்துள்ளது ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலம் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன•  மேலும் ரஷ்யாவின் இந்த பரிந்துரை, அமெரிக்க அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

விவாகரத்துக்கு காரணமான‌ பேஸ்புக்

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம். இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ்புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ்புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20% பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி – தினமலர் / படத்தொகுப்பு விதை2விருட்சம்

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும்.

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  (Standard)  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9)    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2.கைட் லைன்களின் (Guidelines)  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் (Ctrl)  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  (Shift)  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  (Ctrl)   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:   ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்(Shift)  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டு மென்றால் Shift  மற்றும்  Ctrl   கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

எத்தனை முறை இந்த தளம் சென்றாய் ?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.  வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்து விட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணையதளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.

இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும்.  Tools>Page Info  என்பதில் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ்  see “Have I visited this website before today?”  என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.

(படித்ததை படைத்தேன்)

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

பேஸ்புக்: கூகுளை அழிக்க. . .

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

கூகுளை அழிக்க வேண்டும் என்ற தீராத இலட்சியம் கொண்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை. கூகுளை அழிப்பதற்கு பேஸ்புக் என்ற சமூக வலைதளம் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. இந்த கட்டுரையை படியுங்கள்.

இன்றை காலக்கட்டத்தில் எப்படி கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டதோ அதே போல் இ-மெயில் எதிர்காலத்தில்  குறைந்து விடும் எனக் கூறியுள்ளார்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க். அனைத்து இ-மெயில்களையும் உள்ளடக்கிய தகவல் அனுப்பும் வசதி ஒன்றினை பேஸ்புக் புதிதாக உருவாக்கியுள்ளது.

கூகுளின் ஜிமெயில் வசதியை அழிப்பதற்காகவே பேஸ்புக் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பரவலாக அனைவராலும் பேசப்படுவதால் பேஸ்புக்கின் இந்த புதிய வசதிக்கு கூகிள் தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகிறது.   தற்போது பேஸ்புக்கை 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.   இனி இ-மெயில், குறுந்தகவல், பேஸ்புக் தகவல் எதுவாக வேண்டுமானாலும் பேஸ்புக்கை  பயன்படுத்தி அனுப்பிக் கொள்ள  முடியும். மிகவும் முக்கியமான விடயம் இதில் ஸ்பாம் மெயில்களும் வடிகட்டிவிடும். அனைத்தும் ஒரே இடத்தில்

அவரவர் வசதிக்கேற்றவாறு கிடைப்பதால் இது  இ-மெயில் அழிப்பான் என்றே கூறப்படுகிறது.  பல இ-மெயில்களையும் பயன்படுத்துவோர் இனி பேஸ் புக்கில் வந்தது குவிந்து விடுவார்கள் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.   இந்த வசதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டால் தரமான இ-மெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் குறைந்து விடுவர்.  காலங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இ-மெயில் வசதி இல்லாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் ஜிமெயில் தங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும், ஜிமெயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படவில்லை என புதிய விரைவுத் தகவல் அனுப்பும் வசதியை தொடக்கி வைத்துப் பேசிய 26 வயதாகும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் இவ்வாறு கூறினார்.

கணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில குறிப்புகள்

முக்கியமான சில கணிணி டிப்ஸ்

Print E-mail

ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like http://www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like http://www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter Ctrlலை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக் கொண்டேவரும்.தெரியுமா?

Ctrl-லை அழுத்தியவாறே – அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக் கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்

Ctrl லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.

WINDOWS KEYஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.

WINDOWS KEYஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.

F3 அழுத்தினால் Find திறக்கும்.

F5 அழுத்தினால் refresh ஆகும்.

Alt ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift –ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.

shift ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run –ல்

(மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்

.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்

. (ஒரு புள்ளி டைப்பினால்) User Profile திறக்கப்படும்

WINDOWS KEYஐ தட்டி அப்புறம் Lவை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.

WINDOWS KEYஐ தட்டி அப்புறம் Uவை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

(படித்ததை படைத்தேன்)