விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும்

wikileaks founder

வருத்தம் தெரிவிக்கிறேன்’ என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது’ என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது.

இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கி லீக் நிறுவனர் அசாங்கேக்கு எதிராக, `உளவு பார்த்தது’ தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(மாலை மலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி)

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசேஞ்சுக்கு, ரஷ்யா ஆதரவு

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்களை பகிரங்கமாக வெளயிட்டது. இது அமெரிக்காவின் நிழல் உருவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அமெரிக்காவின் இந்த குட்டு வெளிப்பட்டதால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறது ரஷ்யா. அதன் வெளிப்பாடே அசேஞ்சுக்கு ஆதரவுதான். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக உலக நாடுகளுகளின் முன்வைக்க வேண்டும் சிபாரிசு செய்துள்ளது ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலம் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன•  மேலும் ரஷ்யாவின் இந்த பரிந்துரை, அமெரிக்க அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.