3 மாநகராட்சிகளை உருவாக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் கூடுதல் பகுதிகளை இணைத்து சென்னை பெருநகர மாநகராட்சியாக என அறிவிப்பதற்கு பதிலாக புதியதாக 3 மாநகராட்சிகளை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை புறநகர்ப் பகுதிகளை சென்னை மாநகராட்சியில் இணைப்பதன் மூலம் 9 நகரமன்றத் தலைவர்களும் 200க்கும் மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200க்கும் மேற்பட்ட Continue reading

சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது

சென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் தீர்வு காண்பதற்கு 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காண 9789951111 என்ற கைபேசி எண்ணும் நடைமுறையில் உள்ளன• http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணைய தளச்சேவைகள் மூலமும் பொது மக்களின் குறைகள் சிறப்பான முறையில் தீர்க்கப்படுகின்றன•

குப்பைகளை அகற்றுதல், நாய்களைப் பிடித்தல், கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு – இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், சாலைப் பராமரிப்பு மேற்கண்ட சிறப்பானப் பணிகளுக்காக ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காட்ச் விருது வழங்கிசிறப்பித்துள்ளது.

த‌கவல் –  உரத்த சிந்தனை

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி . . .

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள‌ கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள வழக்கில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்து,  சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.வுக்கும்), மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பட்டியல் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தனர். மேலும் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் சேர்த்து தாக்கல் செய்யும்படி சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.