சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது

சென்னை மாநகராட்சி சார்பில் பொது மக்களின் குறைகளை தொலைபேசி மூலம் தீர்வு காண்பதற்கு 1913 என்ற தொலைபேசி எண்ணும், எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காண 9789951111 என்ற கைபேசி எண்ணும் நடைமுறையில் உள்ளன• http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சி இணைய தளச்சேவைகள் மூலமும் பொது மக்களின் குறைகள் சிறப்பான முறையில் தீர்க்கப்படுகின்றன•

குப்பைகளை அகற்றுதல், நாய்களைப் பிடித்தல், கட்டிட இடிபாடுகளை அகற்றுதல், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு – இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், சாலைப் பராமரிப்பு மேற்கண்ட சிறப்பானப் பணிகளுக்காக ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஸ்காட்ச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காட்ச் விருது வழங்கிசிறப்பித்துள்ளது.

த‌கவல் –  உரத்த சிந்தனை

1,76,00,00,00,00,000/-

(2010 டிசம்பர் மாத உரத்த‍ சிந்தனை இதழில் வெளியான தலையங்கம்)

Rs.1,76,00,00,00,00,000/-

– நாறிப்போச்சு நாடு!

படித்து முடித்துவிட்டீர்களா? மூச்சு திணறுகிறதா? இத்தனைக்கோடி ரூபாய் (1.76 இலட்சம்) ஊழலால் உலக அரங்கில் மெகா ஊழலின் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது புண்ணிய பூமி பாரதம்!

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் அமைச்சர் மீது ஊழல் புகார். . . கார்கில் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் திட்டத்தில் ஒரு மாநில முதல்வரே முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் . .  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவிக்காக ரூபாய் 600 கோடி ஒரு குடும்பத்திடம் பேரம் பேசியிருப்பதாக தகவல்கள் . . . . (இது இந்தாண்டில் மட்டும்)இப்படிப்பட்டத் தகவல்களால் நம் இந்திய தேசத்தின் முகம் அவமானப்பட்டுத் தலைகுனிந்திருக்கிறது.

ஊழல் புகாருக்கு ஆளான இரண்டு மந்திரிகளை உடனே பதவி நீக்கி, தன்னைப் பரிசுத்தமான கட்சியாக காட்டிக்கொண்ட ஆளுங்கட்சியால் ,. . .  உலக மகா ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாயிருந்த உடன்பிறப்பை ஓரங்கட்டமுடியாமல் போனது ஏன்? என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாகி கலங்கி நிற்கிறது காங்கிரஸ் என்றால். . . என்னை சீண்டிப்பார். . . என்று நில அபகரிப்பு ஊழல் பேர்வழிகளுடன் தொடர்பு போன்றவற்றில் சிக்கினாலும், சவால்விடும் கர்நாடக முதல்வரை நீக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சி. ராடியா என்ற ஊடக இடைத்தரகர்களுடன் அரசியல் தலைவர்கள் குறிப்பாக . . . தமிழக அரசியல்வாதிகள் சிலர் நடத்திய வியாபாரத்தில் நம்மை ஆள்பவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஊழலால் நம் நாடு நாறிக்கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கிறது என்றாலும், அது நிரூபிக்கப்பட்டால். . . சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் அமைச்சர்களாகவோ . . . தலைவர்களாகவோ அலங்கரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறார்கள். என்ன தேசமிது?

தேகத்தை சல்லடையாக அறிக்கும் புற்றுநோய்க்கு கூட மருந்துண்டு. ஆனால் தேசத்தைச் சுரண்டி அதை கோமா நிலைக்கு தள்ளியிருக்கும் இந்த ஊழல் கொடுநோய்க்கு மருந்துண்டா?

உத்தமராய் இருப்போம் . . .  உண்மைக்குத் துணை நிற்போம் . . . . . ஊழலைத் தவிர்ப்போம் . . . பின்பு அதை ஒழிப்போம் . . . அது ஒன்றுதான் சிறந்த மருந்தாகும்.

மானங்கெட்ட‍ அரசியல்

ந‌வம்பர் மாத உரத்த‍ சிந்தனையில் வெளியான தலையங்கம்

கர்நாடக மாநில அரசியல் இன்று கண்ண‍றாவி அரசியலாகி அவமானப்பட்டு நிற்கிறது. என்ன‍ செய்வது? எப்படிச் செய்வது? என்று தெரியாமல் பாரதீய ஜனதா கட்சி ‘பரிதாப ஜனதா கட்சி’ யாக காட்சியளிக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை ஒரே வாரத்தில இரண்டு முறை நடத்தியக் காட்சி இங்குதான் அரங்கேறியுள்ள‍து. மாநில ஆளுநரின் நடவடிக்கைகளும், எதிர்க்கட்சிகளும், கட்சி மாறிகளும் அடிக்கின்ற கோமாளித் தனங்களும், கட்சித் தாவிய சட்ட‍மன்ற உறுப்பினர்களை நீக்கியது சரியா? தவறா? என்று நீதிமன்றங்கள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்ப‍தும் வேறெங்கும் காணக்கிடைக்காத விசித்திர நிகழ்வுகள்.

சுயேட்சைகளுக்கும், கட்சி மாறிகளுக்கும் ரூபாய் 50 கோடி வரை விலை பேசப்பட்டு வருவது, பதவி வெறியும், பணத்தாசையும் எப்ப‍டி இன்றைய அரசியலை ஆக்டோபஸ் போல பிடித்தாட்டுகிறது என்பது தெரிகிறது.

கர்நாடக அரசியலில் மதச்சார்பற்ற‍ ஜனதா தளம் என்றொரு கட்சி அது தானும் வாழாது பிறரையும் வாழவிடாது என்ற மக்க‍ளாட்சித் தத்துவத்தைக் கொண்டதொரு கட்சி. ஆனால் இந்தக் கட்சியுடன்தான் பா.ஜ•கவும், காங்கிரஸும் மாறி மாறி பேரம் பேசி வியாபாரம் செய்து, ஆட்சியைப் பிடிக்க‍த் துடிக்கின்றன•

ஊழலைத் தட்டிக் கேட்க முடியாத . . . எல்லாரையும் திருப்திப்படுத்த‍ முடியாத . . . ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள‍ எதற்கும் எவருக்கும் அடிபணிய தயாராயிருக்கும் எடியூரப்பா மக்க‍ளாட்சிக்கு இடையூறப்பாவாகத்தான் தெரிகிறார்.

ஒரு முறை இதே மாநிலத்தின் முதல்வராக திரு. ராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது, பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெள்ளிபெற்ற‍து. இதைத்தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று ஆளுங்கட்சி ராஜினாமா செய்ய‍வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சற்றும் யோசிக்காமல் முதல்வர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் மக்க‍ளிடம் நியாயம் கேட்டு அமோக வெற்றிபெற்றார் ஹெக்டே.

நெஞ்சுரமும், அரசியல் தெளிவும், மக்க‍ள் அபிமானமும் பெற்ற‍ ஹெக்டே போன்ற தலைவர்கள் வாழ்ந்த கர்நாடக அரசியல் இன்று வியாபாரிகள் கூடமாக, கொள்கையற்ற‍வர்களின் கோட்ட‍மாக மானங்கெட்டு நிற்பது கண்டனத்திற்குரியது.

அவப்பெயர் ஆட்சி நடத்துவதைவிட, தவறு செய்த மந்திரிகளைத் தட்டிக்கேட்டு, ஆட்சிக்கும் கட்சிக்கும் முரணாக இருப்ப‍வர்களை ஓரங்கட்டி, பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு நெஞ்சுரத்தோடு நேர்மையாக மக்க‍ளைப் பா ஜ க சந்திக்க‍ வேண்டும் என்பதே உரத்த‍ சிந்தனையுள்ள‍ ஒவ்வொருவரின் எதிர்ப்பார்பாகும்.

ப‌யங்கரவாதத்தை வேரறுக்க‍ . . .

உரத்த‍ சிந்தனையில் வெளியான தலையங்கம்

பாரத தேச‌மெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பயங்கரவாதிகளின் படுபாதகச்செயல்கள். ஈவு இரக்க‍மின்றி அப்பாவி மக்க‍ள் கூட்ட‍ம் கூட்ட‍மாக சுட்டுக்கொல்ல‍ப்படுவதும், இரயில் கவிழ்ப்பும், குண்டு வெடிப்பும், சூறையாடுதலும் நிரந்தர சம்பவங்களாகிவிட்ட‍ன•

மாவோயிஸ்டுகள், நகஸலைட்டுகள், பிரிவினைவாதிகள், மத தீவிரவாதிகள், மொழி வெறியர்கள் போன்ற அரக்க‍ர்களின் அட்ட‍காசத்தால் அப்பாவி பொதுஜனம் படுகின்ற அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல.

இவர்களின் நோக்க‍ம் என்ன‍? இவர்களுக்கு பக்க‍பலம் யார்? அடுத்த‍வர் உயிரை அழித்து இவர்கள் அடையப்போகும் வெற்றி என்ன‍? இவர்களை எப்ப‍டி ஒடுக்குவது? என்று அடுக்க‍டுக்காய் நம்முள் கேள்விகள் பிறக்காமல் இருக்குமா? விடைத்தாள் சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது.

தனிநாடு, தனிமொழி, மதவாத அரசியல், ஜாதிப் பிரிவினை ஆகியவற்றை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்க‍ அரசியல் தலைவர்கள் ஏற்படுத்திய DIVIDE AND RULE வலையில் மாட்டிக்கொண்டவர்கள் அப்பாவிகள், குளிர் காய்பவர்கள் அவர்கள்.

பீகாரில் வன்முறையா? குஜராத்தில் கலவரமா? ஜார்கண்டில் ஜாதிக்கொடுமையா? மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலா? இதற்கெல்லாம் அந்தந்த மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநிலங்களை பிரித்து ஆளும் புதிய கொள்கையை கடைபிடித்திருக்கிறது மத்திய அரசு.

இந்த மாநிலங்கள் எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன என்றும் உள்நாட்டு பயங்கரவாத்த‍தை ஒடுக்க‍ வழி தெரியாத நமக்கு உலக அளவில் அரங்கேறும் பயங்கரவாதத்தைத் தட்டிக்கேட்க என்ன‍ அருகதை இருக்கிறது? என்றும் இந்த அரசை அரசியல் அறிவே இல்லாதவர்கள்கூட நாக்குப் பிடுங்கும் அளவுக்கு கேட்பதில் தவறென்ன‍?

ப‌யங்கரவாதம் தொற்றுநோயல்ல‍ தடுப்ப‍தற்கு – அது ஒரு புற்றுநோய்.

பாரத தேசமெங்கும் அது பரவி. . . தேசம் சேதமாகாமல் இருக்க‍ உடனடியாய் அவசர அறுவை சிகிச்சைத் தேவை. பேச்சுவார்த்தை சமாதானம், உடன்பாடு, விட்டுக்கொடுத்த‍ல் என்று இறங்கி வந்து இரக்க‍ப்ப‍ட்ட‍து போதும்.

இராணுவத்தின் துணையோடு கெட்ட‍ப்போரிடும் பகைவரை வேரோடு சாய்ப்போம். இது ரத்த‍ சிந்தனையல்ல‍. . . . தேச உணர்வுள்ள‍வர்களின் உரத்தசிந்தனை

– உரத்த‍ சிந்தனை ஆசிரியர்
நன்றி உரத்த‍ சிந்தனை