உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு…

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு…

இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் Continue reading

ஜெ. ஜெயலலிதா – வாழ்க்கைக் குறிப்பு

ஜெ. ஜெயலலிதா:  தமிழ் நாட்டு அரசியல் தலை  வரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப் பட நடிகையும் ஆவார்.

தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் Continue reading

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார்.

மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு.

பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவாயுதம் ஏந்தி தொடர்ந்து போராடுவோம். 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இன விடுதலை போராட்டத்தை தமிழ் மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாணவர்கள், வக்கீல்கள் எழுச்சியுடன் போராட்ட களத்தில் நின்றனர். ஆனால் இதுமாதிரி போராட்டங்கள் முடக்கி போடப்பட்டன. காங்கிரஸ் எதிர்ப்பு என்பது எங்களது கொள்கை முடிவு. கடந்த தேர்தலில் ஏற்பட்ட எதிர்ப்பு அலையால்தான் காங்கிரஸ் 7 இடங்களில் தோற்றது.

வருகிற சட்டன்ற தேர்தலிலும் இலங்கை பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும். இலங்கை தமிழர் பிரச்சினையை தமிழ் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய கடமையில் இருந்து நாங்கள் ஒருபோதும் தவறமாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.

நன்றி மாலை மலர்

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் என்ற Continue reading

சீமான், விடுதலை

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது.

சீமான், தன்  மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை (10ந்தேதி) காலை 9:30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார்.

சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர்.

நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

(செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி . . .

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள‌ கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள வழக்கில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்து,  சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் விவரங்களை தாக்கல் செய்யும்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.வுக்கும்), மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பட்டியல் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதிமன்றம் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தனர். மேலும் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் சேர்த்து தாக்கல் செய்யும்படி சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு

தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய டி.ஜி.பி., நியமிக்கும் வரை, பதவியில் லத்திகா சரண் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், டி.ஜி.பி., நடராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடராஜ் மனு தாக்கல் செய்தார்.அதில், “எனது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு, டி.ஜி.பி.,யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள், டி.ஜி.பி., நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. எனவே, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி, டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. டி.ஜி.பி., நடராஜ் சார்பில் சீனியர் வக்கீல் சோமயாஜி, வக்கீல் என்.எஸ்.நந்தகுமார் ஆஜராகினர்.

 

“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:ஆவணங்களை பரிசீலிக்கும் போது, டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது வெளிப்படுகிறது. பெயர் தெரியாத அதிகாரி தயாரித்த குறிப்புகளைத் தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரியின் சாதக, பாதக அம்சங்களை பரிசீலனை செய்ததை சுட்டிக்காட்டும் அளவுக்கு, கோப்பில் எதுவும் இல்லை.முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை இந்தக் கோப்பு வெளிப்படுத்தவில்லை. மற்றவர்களை விட லத்திகா சரணுக்கு முன்னுரிமை வழங்கி தேர்வு செய்ததற்கான காரணம் எதையும் கோப்பில் தெரிவிக்கவில்லை. லத்திகா சரணை தேர்வு செய்யும் போது, தகுதியுள்ள மற்ற அதிகாரிகளின் சர்வீஸ் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை. டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

 

டி.ஜி.பி., விஜயகுமார் அயல் பணிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் ஏற்கனவே பணியாற்றிய துறையில் உள்ள உரிமை தொடர்ந்து இருக்கும். அடிப்படையில் எந்தத் துறையில் இருந்து சென்றாரோ, அந்தத் துறைக்கான சலுகைகளை பெற அவருக்கு உரிமை உள்ளது. எனவே, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் அவருக்கு தொடரும். டி.ஜி.பி., பதவிக்கு அவரை பரிசீலித்திருக்க வேண்டும். தற்போது டி.ஜி.பி., அந்தஸ்தில் விஜயகுமார் உள்ளார். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் டி.ஜி.பி.,யாக மனுதாரருக்கு இணையாகவும், லத்திகா சரணை விட சீனியாரிட்டியிலும் உள்ளார். இவரது பெயரை, டி.ஜி.பி.,க்கு பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இந்த முகாந்திரத்தின்படியே லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்ததை ரத்து செய்யலாம்.டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்தது செல்லும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கருத்தில் கொள்ளாமல், மனதை செலுத்தாமல் தீர்ப்பாயம் இப்படி உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பாயம் முறையாக அணுக தவறி விட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லத்திகா சரணை டி.ஜி.பி.,யாக நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படவில்லை என எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு, கடமை எங்களுக்கு உள்ளது. பொதுநலன் கருதி டி.ஜி.பி., பதவியை காலியாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை.

 

* டி.ஜி.பி., ரேங்கில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் பெயரை, அவர்களின் பணி ஆவணங்களுடன் மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.,) தமிழக தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும். பட்டியலை தயாரிக்குமாறு கேட்டு இதை அனுப்ப வேண்டும். வரும் 26ம் தேதிக்குள் யு.பி.எஸ்.சி.,க்கு கிடைத்து விட்டதா என்பதை தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும்.
* தமிழக அரசு அனுப்பிய பெயர்கள், விவரங்களில் விளக்கம் பெற யு.பி.எஸ்.சி., கருதினால், அதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனியாக ஒருவரை நியமித்து அவர் மூலம் நவம்பர் 12ம் தேதிக்குள் தெளிவுபடுத்த வேண்டும்.
* சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பட்டியலை தயாரித்து, அதை நவம்பர் 26ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலருக்கு யு.பி.எஸ்.சி., அனுப்ப வேண்டும்.
* அதை தலைமைச் செயலர் பெற்ற உடன், அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து, டிசம்பர் 7ம் தேதிக்குள் டி.ஜி.பி.,யாக நியமிக்க வேண்டும்.
* அதுவரை டி.ஜி.பி.,யாக பணியாற்ற லத்திகா சரணை அனுமதிக்க வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை டிசம்பர் 14ம் தேதி தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

 

சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு : “டி.ஜி.பி., நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது. ஐகோர்ட் தீர்ப்பின் நகலைப் பெற்று, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக டி.ஜி.பி., நியமனம் குறித்த தமிழக அரசின் விளக்கம்:தமிழக டி.ஜி.பி., நியமனத்தை பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளையே, தமிழக அரசு பின்பற்றியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, இப்பதவிக்கான நியமனம் ஒரு தேர்வு நியமனம். இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யும் போது, அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றும் டி.ஜி.பி., அந்தஸ்தில் இருந்த அனைத்து அலுவலர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களது பணித்திறன்,  அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநில டி.ஜி.பி., தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால், பணி மூப்பு அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள டி.ஜி.பி., பதவியிடங்களுக்கு பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) ஏற்று செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இருந்த போதிலும் அதை நடைமுறைப்படுத்த யு.பி.எஸ்.சி., மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கோரியுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் இது குறித்து உரிய உத்தரவுகள் எதையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.இந்த விவரங்களை யு.பி.எஸ்.சி., சென்னை ஐகோர்ட்டிலும் தனது பதில் உறுதி ஆவணத்திலும் சுட்டிக் காட்டியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசும் இரு முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவரத்தையும் தமிழக அரசின் தலைமை வக்கீல் சென்னை ஐகோர்ட்டின் கவனத்திற்கு, வழக்கின் போது கொண்டு வந்துள்ளார். யு.பி.எஸ்.சி., பட்டியல் தயாரிக்க இயலாத சூழலில், தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய அனைத்து டி.ஜி.பி.,க்களும் கருதப்பட்டு, லத்திகா சரண் தமிழக அரசால், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.எனவே, சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளைக் கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது என்பது தெளிவு. சென்னை ஐகோர்ட்டின் முழுத்தீர்ப்பின் நகலைப் பெற்று, வாசகங்களை நன்கு ஆராய்ந்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.  thanks dinamalar