பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில் Continue reading

சரும அரிப்பிலிருந்து விடுபட சில எளிய வைத்தியக்குறிப்புகள்

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவ தால், ஒரு வேளை இன்னும் அதி கமாக கொசுக் கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட லாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற் சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பி க்கி றோம். உடனடியாக அரிப்பி லிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் Continue reading

பெண் விடுதலை என்றால் என்ன? அதன் தாத்பரியம் என்ன?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிர ஜையாக எண்ணும் மனப் பாங்கு சமூக த்தில் இருந்து விலகவில்லை. பெண்ணி ன் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போ டும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணி கலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய Continue reading

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து?

ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்கு ப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்து விட்டது; அது எஜ மானனுக்குத் தெரியாது. ஆனால் வேலை யாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டா ன்.

எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்து விட் டதே என்றான். அட மடையா Continue reading

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்கலாம்; அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-  
தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடு தலை சிறுத்தைகளும் முதன் முறையாக இணைந்த தேர்தல், விடு தலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த Continue reading

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், “சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக Continue reading

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர் களும் சிறைபிடிக்கப்பட்டு யாழ்பாணம் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையி  . இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட அனை த்துக் கட்சிகளும் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி  போராட்டம் நடத்தின.

இதனை அடுத்து இந்திய அரசு இலங்கையின் இந்த செயல் பாட்டுக்கு கண்டம் தெரிவித்ததோடு  சிறையிலடைக்கப்பட்ட மீனவர் களை உடனடியாக விடுவிக்க Continue reading

சின்னத்திரை விருதுகளை தேர்வு செய்ய குழு அமைப்பு

2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத் திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இக்குழு வில் சின்னத் ‌திரை இயக்குநர் விடுதலை, நடிகர் ராஜ சேகர் உள்ளிட்ட 10பேர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வெள்ளித் திரை விருது களை தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை யிலான குழுவை அமைத்து Continue reading

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார்.

மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு.

பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவாயுதம் ஏந்தி தொடர்ந்து போராடுவோம். 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இன விடுதலை போராட்டத்தை தமிழ் மக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாணவர்கள், வக்கீல்கள் எழுச்சியுடன் போராட்ட களத்தில் நின்றனர். ஆனால் இதுமாதிரி போராட்டங்கள் முடக்கி போடப்பட்டன. காங்கிரஸ் எதிர்ப்பு என்பது எங்களது கொள்கை முடிவு. கடந்த தேர்தலில் ஏற்பட்ட எதிர்ப்பு அலையால்தான் காங்கிரஸ் 7 இடங்களில் தோற்றது.

வருகிற சட்டன்ற தேர்தலிலும் இலங்கை பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும். இலங்கை தமிழர் பிரச்சினையை தமிழ் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய கடமையில் இருந்து நாங்கள் ஒருபோதும் தவறமாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.

நன்றி மாலை மலர்

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் என்ற Continue reading

சீமான், விடுதலை

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது.

சீமான், தன்  மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை (10ந்தேதி) காலை 9:30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார்.

சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர்.

நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

(செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

10 ஆண்டுகளுக்கு பின் மியான்மர் எதிர்க்கட்சி தலைவி தனது மகனை . . .

10 ஆண்டுகளுக்கு பின் மியான்மர் எதிர்க்கட்சி தலைவி தனது மகனை சந்தித்தார். மியான்மரின் எதிர்க்கட்சி தலைவி சூ கியூ (65). ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 20 ஆண்டுகள் இவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சூ கியூ வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சூ கியூவின் 2-வது மகன் கிம் ஆரிஸ் (33) பாங்காக் நகரில் தங்கியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் சூகி யூவை சந்தித்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தாயை நேரில் சந்திக்க மியான்மர் அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாங்காக்கில் உள்ள மியான்மர் தூதரகம் விசா வழங்கியது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் யன்கூன் வந்து சேர்ந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கிய அவர் தன்னை சந்திக்க அங்கு காத்திருந்த தனது தாயார் சூ கியூவை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் மகனும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

நன்றி- மாலைமலர்