ச்சே எப்படி மறந்தேன் குடியரசு தினத்தை

ச்சே எப்படி மறந்தேன் குடியரசு தினத்தை…

ச்சே எப்படி மறந்தேன் குடியரசு தினத்தை…

1950 ஜனவரி 26. இந்தியா குடியரசு நாடாக ஆன நாள். அதாவது, இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள். ப‌லநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடைந்த இந்தியாவை, பல்லாயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழ ந்து, உறவுகளை இழந்து, சொல்லமுடியாத அளவுக்கு கொடுமைகள் அனுபவித்து, அவர்களின் இன்னுயிரையும் துச்ச‍மாக எண்ணி இந்தியாவிற்காக தியாகம் செய்தத‍ன் விளைவாக நமக்கு 15.08.1947-ல் சுதந்திரம் கிடைத்தது.

1947-லேயே இந்தியா, சுதந்திரம் ( Independence ) அடைந்துவிட்டது என்றாலும், நமது நாட்டுக்கென்று அப்போது சொந்தமாக, அரசியல் சட்டம் இருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் (Government) உருவாக்கி அமல்படுத்தியிருந்த சட்டங்களின்படிதான் அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய அரசு இயங்கியது.

பிரிட்டிஷ் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக இயற் றப்பட்ட ‘இந்திய அரசுச் சட்டம்-1935’ (Indian Government Act-1935) எனும் அரசுச் சட்டம் தான் அதுவரையில் நடை முறையில் இருந்தது. இந்தியாவுக்கென்று அரசியல் சட்ட வரைவு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 28ல் இந்தியாவுக்கான நிரந்தர அரசியல் சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழு உருவாக்கிய அரசியல் சட்டவரைவு 1947 நவம்பர் 4-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு கட்ட‍ ங்களுக்கு சென்று இறுதியாக‌ 1950 ஜனவரி 24-ல் நாடாளுமன்றத்தின் 308 உறுப்பின ர்களும் அதில் கையெழுத்திட்டனர். 2 நாட்களுக்குப் பின்னர் (1950 ஜனவரி 26-ல்) அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது குடியரசு அமலான‌ வரலாறு.

ஒவ்வொரு ஆண்டும்  குடியரசு (Republic) தினமும் சுதந்திர (Independence) தினமும் வரும் போதெல்லாம் நம் விதை2விருட்சம் இணையத்தில் குடியரசு தினத்திற்கு முதல் நாள அதாவது 25ஆம் தேதியே இந்திய தேசிய கொடி  ( Indian National Flag) மற்றும் இந்தியாவின் வரைபடத்தை விதை2விருட்சம் பின்னணி யில் வெளியிட்டு, என்  வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து  இந்திய குடிமகன் என்ற கர்வம் கொள்வது என்வழக்க‍ம் ஆனால் இத்தகைய‌ அருபெரும் இந்தியாவி ன் குடியரசு  (Republic) தினத்தை நான் மறந்தது எனக்கே வெட்கமாகவும், வருத்த‍மா கவும் உள்ள‍து.

இதுபோன்றதொரு தவறு அடுத்து வரும் ஆண்டுகளில் நான் நிகழாமல் மிகவும்  விழிப்புடன் பார்த்துக் கொள்வேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய, குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#Independence #Republic  #இந்தியஅரசுச்சட்டம் #IndianGovernmentAct #1935 #இந்தியா #சுதந்திரம் #vidhai2virutcham #குடியரசு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.