என் படத்தில் வடிவேலா… ?????????

நான் அடுத்து இயக்க போகும் படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. தமிழில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந் தை தமது பேச்சால் வெளு த்து வாங்கிய வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா… என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் Continue reading

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் Continue reading

நோ நோ என்கிறார் சிம்பு!

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ‌டைரக்டர் வெங்கட்பிரபுவிடம் சிம்பு கேட்டுக் கொண்டதாகவும், அஜித்தும் அதற்கு சம்மதித்ததால் மங்காத்தாவில் சிம்பு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மங்காத்தாவில் தான் நடிக்கவில்லை என்று கூறுகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் வானம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேட்டியளித்த சிம்புவிடம், நிருபர்கள் மங்காத்தா நீங்களும் நடிக்கிறதா ஒரு செய்தி உலவுதே? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிம்பு, நானும் கேள்விப்பட்டேன். அப்படியொரு எண்ணம் இதுவரைக்கும் இல்லை. யாரும் நடிக்கச் சொல்லி கேட்கவும் இல்லை, என்றார்.

உங்களை விட அனுஷ்கா உயரமாச்சே? என்ற கேள்விக்கு “வேணும்னா பக்கத்துல போய் நிக்குறேன். அளந்துக்கங்க” என்றார் சிம்பு. ஆரம்பத்தில் ஜோதிகாவின் ரசிகன் நான் என்று சொல்லி வந்த சிம்பு, இப்போது அனுஷ்காவின் தீவிர ரசிகன் ஆகி விட்டாராம். அருந்ததி படம் பார்த்ததில் இருந்து அனுஷ்கா ரசிகராகி விட்டேன் என்று சொன்ன சிம்பு, அந்த படத்தில் அனுஷ்காவின் பர்பாமென்ஸ் பக்காவா இருந்துச்சி, என்று கூறி பாராட்டினார். வானம் படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம் சிம்பு. (அப்போ அனுஷ்காவின் கெட்ட ஆட்டம் இருக்குன்னு சொல்லுங்கோ?)