அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள்  இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை Continue reading

டீன் ஏஜ்: அழகுக் கவலை!

 

டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல்

Teen Age Girls

ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.  இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது.

பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’ போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுயமதிபீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகபெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.


இந்த பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நல பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளைம் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பி விடலாம்.

பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிபாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ஸ்லிம்`மாக இருந்தால்தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை போன்ற நோய்க்கு ஆளாகின்றனர்.

எனவே சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கபடுத்த வேண்டும். உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை சிலருக்கு வரும். இது இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருபதற்கு ஹார்மோன் கோளாறு, உணவுபற்றாக்குறை… இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு வளர்ச்சி தள்ளி போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர்.

பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.

உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமு க, கலாச்சார மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர் தயங்குகிறார்கள். அப்படித் தயங்கிக் கொண்டிராமல் பிள்ளைகளிடம் சகஜமாக பேசி, அவர்களின் உடல் ரீதியான, மன ரீதியான  பிரச்சனைகளை என்ன என்பது தெரிந்து அந்த பிரச்சனை தீர்த்து வையுங்கள்.

(கண்டதை படைக்காமல், கண்டெடுத்ததை படைக்கிறேன்)

அழகான பாதங்களுக்கு . . .



பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர்.

எலுமிச்சை சாறு          – 20 மிலி

ஆலிவ் எண்ணெய்      – 2 ஸ்பூன்

பால்                                  – 50 மிலி

ஏலக்காய்                        – 1 கிராம்

பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

{படித்தேன் படைத்தேன்}

அழகோ அழகு…

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம்.  அதன் வருவாய் ஒவ்வொரு நாட்டிலும் 25 விழுக்காட்டிற்கு குறையாமல் உள்ளது.  முன்பெல்லாம் மேல்தட்டு மக்களையும், நகர வாசிகளையும் முன்வைத்து சந்தைப் படுத்திய இந்த அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்கள் இப்போது நடுத்தர மக்களையும், கிராமவாசிகளையும் நோக்கி தன் விளம்பர உத்தியைத் தொடர்ந்துள்ளது.

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.  இப்படிப்பட்ட அழகு சாதன பொருட்களின் பகட்டு விளம்பரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை.

காசு கொடுத்து கர்மத்தை வாங்காதே என்பர் நம் முன்னோர்கள்.  அதுபோல் இந்த முக அழகு பொருட்கள் உடலுக்கு தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் நாம் பணத்தையும் அழகையும் இழப்பதுதான் மிச்சம்.

ஆனால் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல், வெள்யைõக தோன்றுதல், பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

{படித்தேன் படைத்தேன்}

ஆண்களுக்கான முடி அழகு டிப்ஸ்

முடி என்பது அனைவருக்கும் முக்கியமான விஷயம். அதை எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து உங்கள் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்

முடி விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் தலைவாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது.

சரியான சடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக முடி அடர்த்தியாக மற்றும் நீளம் இல்லாமல் இருப்பவர்கள்,ரொம்ப சொட்டையா இருப்பவர்கள், எனக்கு நல்ல தலை ஸ்ட்ரக்சர் இருக்குங்க ஆனா பார்த்தால் ஸ்மார்ட்டா செக்ஸியா இல்லைன்னு
நினைக்கிறவங்க இவங்க எல்லோருமே இந்த பிரச்னையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.
முதலில் அடர்த்தியான முடி உள்ளவர்கள்.

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த சடை போட்டாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க, அதற்க்கு காரணம் தங்கள் அதிகப்படியான முடி தான். எண்ணெய், லோஷன் அது இதெல்லாம் இருந்தாலும் நாம் எண்ணெயின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

மேல இருக்கும் படம் தேங்காய் எண்ணெய் போட்டு செஞ்ச சடை. அடர்த்தியா முடி – ஆனா குட்டையா முடி இருக்கவங்க , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது. அப்பறம் ரப்பர் பேண்ட் போட்டு கட்ட முடியாமயே போய்விடும். இல்லைங்க எனக்கு வழுவழுப்பான எண்ணெய்தான் வீட்டுல வாங்கித்தராங்கன்னு சொன்னா, ஏங்க, நீங்க ஐயோ பாவம். யூத்துன்னு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்க கல்யாணமான பெருசுன்னு எல்லாரும் முடிவு செய்யலாம்.

நடுவில் சொட்டை சுத்தியும் முடி உள்ளவர்கள்.

இவர்களும் வழுவழுப்பான எண்ணெய்களை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. அதற்குப்பதில் சொட்டையில் கண், மூக்கு வரைந்தால், அலுவலகத்தில் பாஸை ஏமாற்றி தூங்க வசதியாயிருக்கும். நன்கு தூங்குபவர்கள் குறட்டையை தவிர்க்கவேண்டும்.

நான் முழு சொட்டையும் இல்ல முழு மொட்டையும் இல்ல , ஆனா தலையில பர்ஃபெக்ட் ஆன முடி வட்டம் இருக்குன்னு வருத்தப்படறீங்களா! இதற்கெல்லாம் காரணம் நீங்க சரியா வட்டத்தை மறைக்க சடை போடாததே.

இந்த கீழ இருக்க டிசைன் போடுங்க அலுவலகத்தில் தூங்கவும் வசதியாக இருக்கும்.
முக்கியமான விஷயம் ஆண்களின் மீசை. மூக்கிற்கு கீழ் மீசை வைக்காவிட்டாலும் தலையில் பின்னால் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும்.

அதே போல இளைஞர்களுக்கே உள்ள எண்ணம் , வித்தியாசமாக தலைக்கு கலர் அடித்துக்கொள்வது. முடிக்கு தகுந்த மாதிரி கலர் அடித்துக் கொண்டால், உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் கூட, இன்னும் கொஞ்சம் சிகப்பு க்கலரா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்வார்கள். அதே போல ஒரு முக்கிய விஷயம், முடி விஷயத்தில் ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின்பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வாரம் இருந்துவிட்டு வழக்கம்போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் முடி ஸ்டைல் தேர்வு உட்பட.

நான் கூறிய எல்லாவற்றையும் விட முக்கியமானது தலைக்கு மேல என்ன இருக்குங்கறதை விட தலைக்கு உள்ள என்ன இருக்கு என்பதுதான்.

பின் குறிப்பு:
மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு முடி உள்ளவர்களுக்கு மட்டுமே நமது முடி அழகை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், சொட்டையாக உள்ளவர்களுக்கு விக்கை தவிர வேறு வழி இல்லை.

thanks forumlogr

தினந்தோறும் அரை மணிநேரம் வேகமாக நடைபயிற்சியை மேற்கொண்டால் . . .

தினந்தோறும் அரை மணிநேரம் வேகமாக நடைபயிற்சியை மேற்கொண்டால் புற்று நோய், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் இளமையில் முதுமை, பக்கவாதம் மற்றும் டயாபடீஸ் வகையுள்ள நோய்  போன்ற நோய்கள் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு ஏஞ்சிலியா பல்கலை கழகம் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக  புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதை கண்டறிந்தனர். மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் சிரித்து பேசினால் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.  கிழக்கு ஏஞ்சிலியா பல்கலை கழகம் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள் முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும.

ஆக்கம் சிவகுமார், சித்த‍ மருத்துவர்