அப்துல் கலாம் தரும் தன்னம்பிக்கை வரிகள்

1. முடியாது என்ற நோய்

“கரிகாலன் முடியாது என்று நினை  த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக் ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற் கைக்கோளை இந்தியா ஏவியிருக் க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியைகா ண வேண்டும். நதிகளை இணை க்க வேண்டும் என்றால் என்ன வே ண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “

2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்

மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தை க் காத்துக் கொள்ள வீரம் தேவைப்ப ட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடி த்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண் ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட் டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுத ப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்

3. உறுதியும், நம்பிக்கையும்

உறுதியும், நம்பிக்கையும் தலை மைப்பண்பும் கொண்ட நம்முடை ய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுட ன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் கார ணமாக ராணுவத்தின் எத்தனை யோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்ற ன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

4. சிந்தனை செய்

இந்தியாவுக்கு நாம் என்ன செய்ய லாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டி யவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுக ளை நாமும் பெற வேண்டுமானா ல்! “புலப்படாத எதிர்காலத் துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலா கும்.”

5.  ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   வாழ்க்கையில் உன்னை வரவேற்கு ம் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக் திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெ டுக்க வேண்டும்.”

6. “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெ ளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகி றார்கள்! இந்த மு யற்சியில் நாங்கள் இரண்டு மனதில் லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக் கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொ றியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டா ம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோ ம் என்னும் அழுத்தமான உறு தியுடன் இருக்கிறோம்!”

8. இமயத்தின் உச்சியை எட் டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படு கிறது.”

9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையா விட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டிய தில்லை. தேர்வு முடிவு கள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முட ன் இருப்பாரானால், ஒருவரும் உங்களு க்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிக மாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல கார ணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச் னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நா ம்தான் பிரச்னைகளை மேலாதிக் கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

உங்களை மேன்மேலும் மெருகூட்ட‍ சில வரிகள்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பி னால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண் டு அதில் வெற்றி பெறுவதுதான் இளை ஞர்களின் தனித்தன்மையாகும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

4 Responses

  1. KALAM IS THE BEST PERSON AND NO ONE LIKE KALAM SIR

    Like

  2. There no one like Abdul kalam sir

    Like

  3. Thank you so much for sharing the above lines .

    Like

  4. supero super

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.